Friday 21 October 2011

''திருக்குறள்'' மிக எளிய உரை



கடவுள் வாழ்த்து (குறள் 1-10)

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
                                  பகவன் முதற்றே உலகு.                             

பொருள்:-எந்த மொழிக்கும் முதல் எழுத்து 'அ'.அதுபோல உலகம் கடவுளையே முதன்மையாக கொண்டுள்ளது.


கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்.                
                 
பொருள்:-கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்:-மனத்தாமரையில் கோயில் கொண்டுள்ள கடவுளை வணங்கினால் உலகில் நீடித்த புகழுடன் நீண்ட காலம் வாழலாம்.


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

பொருள்:-விருப்பு, வெறுப்பற்ற கடவுள் திருவடிகளை வணங்கி வாழ்பவர்க்கு எப்போதும் துயரம் இல்லை.


இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள்:-கடவுளுடைய புகழை மட்டும் போற்றி வணங்கி வழிபட்டால் நம்முடைய நல்வினை,தீவினையாகிய இரண்டின் விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

Videos(Clik Play Button)

Popular Posts

 

உதிரிப்பூக்கள் Copyright © 2011 Designed by Mydeen